
திருப்பரங்குன்றம் அருகே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் ரோட்டில் நேற்று முன்தினம் (மார்ச்.2) அடையாளம் தெரியாத வாலிபர் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து தண்டவாளத்தில் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிந்தது. மதுரை ரயில்வே எஸ்ஐ கேசவன் மற்றும் போலீசார் விசாரித்ததில் மதுரை மேல அனுப்பானடி அம்பேத்கர் நகரை சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (24) இவரும் இவரது தந்தையும் இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.
மகன் மணிகண்டனுக்கும் தந்தைக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டன் தனியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு மணிகண்டன் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து நிலையூர் ரோட்டில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு நள்ளிரவில் வந்த ரயில் முன்பாக தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் மணிகண்டன் அணிந்திருந்த சட்டை கைலி மட்டும் இரு சக்கர வாகனத்தின் எண்ணை வைத்து இவர் குடியிருந்து வரும் பகுதி முகவரியில் விசாரித்ததில் மேற்கண்ட விபரங்கள் தெரிந்தது. போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.