பொதுமக்களே வேண்டாம் ..!!திருப்பரங்குன்றம் மலையை காக்க ஆர்ப்பாட்டம்… காவல்துறை முக்கிய அறிவிப்பு.!

திருப்பரங்குன்றம் மலையை காக்க ஆர்ப்பாட்டம்.! காவல்துறை முக்கிய அறிவிப்பு.!

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்ற மலை தாவா சம்பந்தமாக கடந்த சில நாட்களாக இரு வேறு பிரிவினர்கள் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டும் அதனால் இரு பிரிவினர்களைச் சேர்ந்தவர்கள் மீது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

மேலும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருப்பரங்குன்றம் மலை தாவா சம்பந்தமாக இரு பிரிவினர்கள் சார்பிலும் 05 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் 04.02.2025 ம்தேதி திருப்பரங்குன்றம் மலை தாவா சம்பந்தமாக இந்து முன்னணி இயக்கத்தின் திருப்பரங்குன்ற ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையின் அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட விபரம் தெரிந்து இருந்தும் வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் தண்டோராக்கள் போட்டும் திருப்பரங்குன்றத்திற்கு பொதுமக்களை அதிக அளவில் திரட்டும் செயல்களில் இந்து முன்னணி இயக்கத்தினர் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது.

ஆகவே சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் மதுரை மாநகர காவல் துறையின் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பரங்குன்ற மலை தாவா சம்பந்தமான இந்து முன்னணி அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் நடந்ததும் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வர வேண்டாம் எனவும் மீறி வருபவர்கள் மீதும் அவர்களுடைய வாகனங்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன்மூலம் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!