
கல் குவாரியை மூடக்கோரி… களத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் -மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி பொன்னமங்கலம் ஊராட்சி, சொரிக்காம்பட்டி ஊராட்சி, ஆகிய ஊராட்சிகளை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முறைகேடாக செயல்படும் 6 கல்குவாரிகளால் உயிர்வாழ தகுதியற்ற நிலமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிப்பு:
1) கிராம மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.
2) வெடி வெடிப்பால் வீடுகள் சேதம் மற்றும் இடிவு அபாயம்.
3) தூசி மாசுபாட்டால் சுவாசக் கோளாறுகள் மற்றும் உடல்நிலை பாதிப்புக்கள்.
4) விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு.
5) கனரக வாகனங்களால் சாலை சேதம் மற்றும் விபத்து அபாயம்.
6) ஊராட்சி மன்ற கட்டிடம் சேதம் மற்றும் பணியாளர் காயம்.
7) வெடியால் கல்துண்டுகள் பறந்து வந்து வாகன சேதம் மற்றும் நேரடி உயிர் அச்சுறுத்தல்.
8) மனிதர்கள் மற்றும் கால்நடைகள் மீது அதிர்வினால் தீவிர தாக்கம்.
9) நிரந்தர அச்சம் மற்றும் மன அழுத்தத்தில் வாழும் கிராம மக்கள்.
10) உடனடி ஆய்வு மற்றும் நிரந்தர மூடல் கோரிக்கை.
எனவே, 10 ஆண்டுகளுக்கு மேல் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என திருமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் முனீஸ் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.