அட என்னடா இவங்க தொல்ல தாங்க முடியல… இரவில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி!!

அட என்னடா இவங்க தொல்ல தாங்க முடியல… இரவில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி!!

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடு ஒன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய சிறுமியை ஒரு மாடு மிகக் கொடூரமாக முட்டி காயப்படுத்திய சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அந்த மாடுகள் பறிமுதல் செய்யப்படுவதோடு, உரிமையாளருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது.

அதே போல, அண்மையில் வெளியான ஒரு சி.சி.டி.வி வீடியோவில், சாலையில் செல்லும் மாடு ஒன்று ஒருவரை கடுமையாக முட்டி குத்தி மிதித்த காட்சி பார்ப்பவர்களை நடுங்கச் செய்தது. இதனால், தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் 1வது ஊராட்சிக்குட்பட்ட கைத்தறி நகர் பகுதியில், இரவு நேரத்தில் முக்கிய சாலையில்  மாடுகள் சுற்றித் திரிவதால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென குறுக்கே வரும் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால்,  இப்பகுதி சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளால் பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

நிலையூர், கைத்தறிநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்  இரவு நேரங்களில் நிறைய மாடுகள் சுற்றித் திரிவதைப் பார்க்க முடிகிறது.  இப்பகுதியில் மாடு வளர்க்கும் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளைக் கட்டி வைக்காமல் அவிழ்த்து விட்டு விடுவதால், மாடுகள், இங்கு உள்ள காய்கறி கடைகளில் இருந்து கொட்டப்படும் வீணான காய்கறி கழிவுகளை உண்பதற்காக இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.

நிலையூர் மற்றும் கைத்தறி நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகள் காலியாக இருக்கும் என்று கருதும் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்கிறனர். அப்போது வேகமாக திடீரென குறுக்கே வரும் மாடுகள் மோதி நிறைய விபத்துகள் நடக்கிறது. அவர்கள் சிறிய காயங்களுடன் அங்கே இருந்து செல்கின்றனர். மாடுகள் மீது மோதி விபத்து ஏற்படுவதால் இது குறித்த புகார்களும் காவல் துறைக்கு செல்வதில்லை. சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு முன் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!