தனது மகளுடன் பொங்கல் கோலம் போடும் மதுரை முத்துவின் வைரல் வீடியோ.
வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் தனது திறமையை வெளிப்படுத்தினால் எப்படியாவது வாழ்க்கையில் சாதித்து முன்னுக்கு வரலாம் என்பதற்கு பல பேரை உதாரணமாக சொல்லலாம். அந்த வரிசையில் பலருக்கும் பரிச்சயமான மதுரை முத்துவும் இருக்கிறார்.
டிவி சேனல்களில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டிருக்கும் மதுரை முத்து திருமண நிகழ்வுகள், கோவில் விசேஷங்கள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். அது தவிர பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக மதுரை முத்து கலந்து கொள்ளும் நிலையில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.
கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, காமெடி ஜங்சன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக பரந்து அறியப்பெற்றார். மேலும் தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகருமான மதுரை முத்து மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளத்தில் வசித்து வருகிறார்.
இவர் மேடைகளில் ஒரு மணி நேரம் பேசினார் என்றால் அதில் எப்படியும் 25 முதல் 30 முறையாவது பார்வையாளர்களை தன்னுடைய காமெடியால் சிரிக்க வைத்து விடுகிறார். பலர் பேசும் மொக்கை காமெடிகளுக்கு கூட மதுரை முத்து தான் அடையாளமாக இருக்கிறார். அதனாலேயே மதுரை முத்து ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
நகைச்சுவை மட்டும் இன்றி பல்வேறு நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு தன் வீட்டைச் சுற்றியுள்ள நலிவடைந்த ஏழை முதியோர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து தைப்பொங்கல் பண்டிகை ஒட்டி தனது வீட்டில் வாழைமரம், மாவிலை தோரணம் கட்டி வாசலில் தனது மகளுடன் கோலமிட்டு பொங்கல் வைக்கும் வீடியோ தற்போது வைரல் ஆக பரவி பொதுமக்கள் பேசும் பொருளாகி உள்ளது.
பொங்கல் பண்டிகை கொண்டாட தனது மகளுடன் வாசலில் கோலம் போடும் வீடியோ பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்தாலும் தந்தையின் பாச உணர்வு மிளிர்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.