உஷார்: சாலையில் இப்படி பொறுத்தியிருப்பது என்ன தெரியுமா.?

NH இந்திய தேசிய சாலையில் வேகத்தை கண்காணிக்க கேமராக்கள் மீறினால் அபராதம்

வந்தாச்சு வேகத்தை கணக்கிடும் கருவி வாகனத்தில் அதிவேகத்தில் சென்றால் அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

வாகனங்களை எச்சரிப்பதற்காகவா அல்லது அவற்றிற்கு அபராதம் விதிப்பதற்காகவா என்பது குறித்து விரைவில் அரசு அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம்
சமயநல்லூரில் இருந்து திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் கப்பலூர் காலனி பஸ் ஸ்டாப் அருகே மதுரையிலிருந்து வரும் வாகனங்களின் வேகத்தை கண்காணிப்பதற்கும்,

தோப்பூர் பாலத்தில்
திருமங்கலம் பகுதியில் இருந்து
சமயநல்லூர் நோக்கி செல்லும் வாகனங்களின் வேகத்தை கண்காணிப்பதற்கும் சாலையின் நடுவில் அமைக்கப்பட்ட தூண்களில் 2 வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள் நேற்று சோதனை முயற்சியாக திருமங்கலம் கப்பலூர் காலனி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள வேகக் கட்டுப்பாட்டு கேமராக்கள் இயக்கப்பட்டன.

இந்த பகுதி வழியாக வரும் வாகனங்களை 100 மீட்டர் தூரத்திலேயே கேமராக்கள் ஸ்கேன் செய்து விடுகின்றன. அப்பொழுது வாகனங்கள் வரும் வேகத்தை அருகில் உள்ள டிஜிட்டல் திரையில் காண்பிக்கின்றன.

மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் வாகனங்கள் குறித்து பச்சை நிறத்திலும், அதற்கு மேல் வேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை சிகப்பு நிறத்திலும் காண்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சுங்க சாவடி அதிகாரி ஒருவர் கூறுகையில் காவல்துறை ஒத்துழைப்புடன் இது வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிவேகத்தில் செல்லும் வாகனத்தை அபராதம் விதிப்பது அல்லது எச்சரித்து அனுப்புவதா! என விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் இது சோதனை முறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்தனர். இதனால் நான்கு வழிச் சாலைகளில் அதிவேகத்தில் சென்று விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும் என தெரிவித்தார்கள்.

  • மதுரை செய்தியாளர் வி.காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!