எடைக்கு போட்ட குக்கரில் தங்க நகை. தமிழ்நாடு வியாபாரி செயலால் நெகிழ்ச்சி!

kerala congrat tamil scrap collector

அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட கூடாது என சொல்வது எளிது. ஆனால் அதை செயலில் காட்டுவதற்கு மிகப்பெரிய நேர்மையும், உண்மையான மனித நேயமும் தேவை.

இந்த சூழலில் தற்போது கேரளாவில் தமிழக வியாபாரி செய்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவின் கொல்லம் அருகே உள்ள பஞ்சகோணம் பகுதியை சேர்ந்த சுமித்ரா என்ற பெண்மணி, தமிழகத்தை சேர்ந்த இரும்பு வியாபாரி மகேஷிடம் வீட்டில் கிடந்த பழைய குக்கர் உள்ளிட்ட பொருட்களை எடைக்கு போட்டுள்ளார். அதனை வாங்கி, எடைப்பார்த்து பணமும் கொடுத்துள்ளார் மகேஷ்.

பின்னர் இரண்டு நாள் கழித்து எடைக்கு சேர்ந்த பொருட்களை பிரிக்கும்போது, குக்கருக்குள் தங்க நகைகள் இருப்பதை கண்டு மகேஷ் திடுக்கிட்டார்.

அதனை எடுத்துக்கொண்டு சுமித்ராவின் வீட்டுக்கு சென்று, குக்கரில் இருந்து தான் எடுத்த பழைய தங்க நகைகளை அவரிடம் திருப்பி கொடுத்தார்.

குக்கருக்குள் ஒன்றரை பவுன் தங்க நகை வைத்ததையே மறந்துவிட்ட நிலையில், தன்னிடம் மகேஷ் கொடுத்த நகைகளை கண்டதும் கண்கலங்க, நா தழுதழுக்க நன்றி சொன்னார் சுமித்ரா. அவருடன் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்க நகைகளை தெரியாமல் எடைக்கு போட்டாலும், அதைப் பத்திரமாக உரியவரிடமே சேர்த்த தமிழக வியாபாரி மகேஷுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

‘திரு. மகேஷ்’ என பாராட்டு! kerala congrat tamil scrap collector

சமீபத்தில் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில் ‘திரு. மாணிக்கம்’ படம் வெளியானது. அதில், லாட்டரி கடை உரிமையாளரான மாணிக்கம் பரிசு விழுந்த 1.5 கோடி மதிப்புள்ள லாட்டரியை, உரியவரிடம் திருப்பித் தர அவரைத் தேடிப் புறப்படுகிறார்.

தனது நேர்மை தவறிவிட கூடாது என்ற உறுதி ஒரு பக்கம், பணத்திற்கு ஆசைப்பட்டு மிரட்டவும், கேலியும் செய்யும் குடும்பத்தினர் மறுப்பக்கம் என சிக்கி தவிக்கும் மாணிக்கம், எப்படி அதனை உரியவரிடம் சேர்த்தார் என்பதை நெகிழ்ச்சி பொங்க அப்படம் பேசியது.

இந்த நிலையில் மாணிக்கம் போன்றே, அடுத்தவர் பொருளுக்கு வீண் ஆசைப்படாமல் நேர்மையுடன் உரியவரிடம் தங்க நகைகளை சேர்ந்த தமிழக வியாபாரி மகேஷை, ‘திரு.மகேஷ்’ என்று குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!