திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இந்துக்களை குறித்து இழிவாக பேசியதற்கு அவரை கைது செய்ய வேண்டுமென இராஜபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் காவல் நிலையத்தில் புகார்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் ஒன்றிய தலைவர் சிவசக்தி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இந்துக்களை இழிவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சி சார்ந்த மேலும் 100 பேர் புகார் அளிக்கும் என தெரிவித்தனர்..
செய்தியாளர் வி.காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.