சிவகாசியில் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமார் பிரச்சாரம்!

சிவகாசியில் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமார் பிரச்சாரம்!

சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா,தனது கணவர்நடிகர்சரத்கு மாருடன்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது நடிகை ராதிகா பேசியதாவது:- உங்களது சகோதரியாக, தோழியாக உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு உங்களிடையே வாக்கு கேட்டு வந்திருக்கும் எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். விருதுநகர் மாவட்டத்திலேயே தங்கி இருந்து உங்களது சேவைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். கடந்த 10 ஆண்டு காலமாக சிறந்த முறையில் ஊழலற்ற ஆட்சி நடத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசின் திட்டமான மதுரை மாவட்டம் தோப்பூரில் 33 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்படும். விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது, விருதுநகர் மாவட்டத்தில் 2,489 கோடி ரூபாய் செலவில் ஜவுளி பூங்கா கொண்டு வந்தது, சிவகாசி பட்டாசு தொழிலுக்கு எதிரான கள்ளத்தனமாக வந்த சீன பட்டாசுகளை தடுத்து நிறுத்தியது மத்திய பாஜக அரசு. தமிழகத்திற்கு அள்ளி அள்ளி கொடுத்து, பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பு கொடுக்கக் கூடிய ஒரே தலைவர் நரேந்திர மோடி. பட்டாசு குண்டான நீதிமன்ற வழக்கு நல்ல முறையில் முடிவடைந்து தொழில் நல்ல முறையாக நடக்க
நான் பாலமாக இருப்பேன். வாக்குப்பதிவு கணினி இயந்திரத்தில் 3-வது இடத்தில் எனது பெயர் இருந்தாலும், எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து என்னை முதலிடத்திற்கு கொண்டு வாருங்கள். என்றார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் பேசும் போது:- 3-வது முறையாக நரேந்திர மோடி பாரதப் பிரதமராக வருவதற்கு ண்டான இந்த தேர்தலில் அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள். தீப்பெட்டி- பட்டாசு தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்தது பாஜக அரசு. வேட்பாளர் ராதிகா படித்தவர், பண்பாளர், நிர்வாக திறமை கொண்டவர். அவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற உள்ள அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்யக்கூடியவர். என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!