
சினிமாவை மிஞ்சிய சம்பவம் – சப்இன்ஸ்பெக்டர் சாகசம்… குவியும் பாராட்டுகள்!
தேனி மாவட்டம் கம்பம், ராயப்பன்பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அதிசயம் (60). என்பவரிடம் 5 கோடிக்கு மேல் பணம் கேட்டு இன்று கத்தி முனையில் அதிசயத்தை காரில் மர்ம கும்பல் கடத்தியது. இதையடுத்து மாவட்ட காவல்துறை அனைத்து காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தது.
அப்போது ஆண்டிபட்டி எஸ்.ஐ.சுல்தான் பாட்ஷா, கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். அவ்வழியாக வந்த காரை நிறுத்தியும், நிறுத்தாமல் கிராம சாலை வழியாக காரை திருப்பி வேகமாக சென்றுள்ளார். தொடர்ந்து எஸ்.ஐ.சுல்தான்பாட்ஷாவும் தனது பைக்கில் கரடு முரடான சாலையில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு உயிரைப் பனையம் வைத்து விரட்டிச் சென்று தனி ஒரு ஆளாக கத்தி முனையில் கடத்திச் சென்றவரை மீட்டுள்ளார்.
இதனை அறிந்த தேனி மாவட்ட எஸ்பி மற்றும் காவல்துறையினர் எஸ்.ஐ.சுல்தான் பாட்ஷா – க்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.