
தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று காலை தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, எனது கட்சி விவகாரம் என்றால் என்னிடம் தான் முதலில் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் என்னிடம் தான் கேட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் 5 ஆம் தேதி ஆஜராகுமாறு நிர்வாகிகளுக்கு சம்மம் அனுப்பி இருப்பதாகவும் அந்த சம்மனில் தானே நேரில் சென்று ஆஜராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் காலம் என்பதால் இது போன்ற என்னையும் எனது கட்சியையும் முடக்க பாஜக திட்டம் தீட்டி உள்ளது. தேர்தல் நேரத்தில் தன்னை கைது செய்து உள்ளே வைக்க நினைக்கிறது.
பாஜகவின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நாம் தமிழர் கட்சியினர் தடையாக உள்ளதால் தான் இந்த என்ஐஏ சோதனை. விடுதலைப்புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும் என இந்த சோதனை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.