
விருதுநகர் மாவட்டம்,அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள ராமானுசபுரம் என்கிற சிற்றூரில் 1952 ஆகஸ்ட் 25-இல் பிறந்தார். பிறகு அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. அங்கு தந்தையின் அரிசி ஆலையில் உடன் உதவி வந்தார். அவருக்கு சிறு வயதில் இருந்தே திரைத்துறையின் மீது ஆர்வம் இருந்தது. அதனால், சென்னைக்கு வந்து கடும் முயற்சிக்குப் பிறகு நடிகரானார்.
1979-இல் இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி, 100-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயனாக நடித்துள்ளார். திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். அவர் நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் வெளிநாடுகளில் நட்சத்திர நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார்.
அரசியல் பாதை: பிறகு, அரசியல் பக்கம் விஜயகாந்த் கவனம் செலுத்தத் தொடங்கினார். 1993-இல் உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் ரசிகர்கள் பலர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அது அவருக்கு நம்பிக்கையை அளித்து, அரசியலில் உத்வேகம் எடுக்க வைத்தது.

2005 செப்டம்பர் 14-இல் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கினார்.2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றிபெற்றார். 2011-இல் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவோடு விஜயகாந்த் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ரிஷிவந்தியம் தொகுதியிலில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரோடு 41 தேமுதிகவினரும் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குச் சென்றனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
இந்தக் காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே பால்விலை தொடர்பாகவும் இடைத்தேர்தல் தொடர்பாகவும் அனல் பரப்பும் விவாதம் நடைபெற்றது. அதோடு, அதிமுகவுடனான கூட்டணியும் முறிவுற்றது.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் சார்பில் விஜயகாந்த் முதல்வராக வேட்பாளராக முன்மொழியப்பட்டு தேர்தலைச் சந்தித்தார். ஆனால், அந்தத் தேர்தலில் விஜயகாந்த் உள்பட கூட்டணிக் கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தனர்.
2021-இல் தேர்தலில் தேமுதிக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது.
இந்தத் தேர்தலுக்கு முன்பிருந்தே விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை(டிச.28) உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பிரேமலதா என்ற மனைவியும், விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என்கிற மகனும் உள்ளனர். அவரின் உடலில் சாலிக்கிராமத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் திரை பிரபலங்கள் கட்சி நிர்வாகிகள் ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தேமுதிக கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் தேமுதிக நிறுவனரும் திரைப்பட நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி தெய்வேந்திரன் முன்னிலை வகித்தனர். தென்கரை கிளை செயலாளர் அம்பலம், குருநாதன், சரவணன், ராசி ஸ்டுடியோ கண்ணன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சோழவந்தான் மாரியம்மன் கோவில் பகுதி மற்றும் வட்ட பிள்ளையார் கோயில் பகுதி ஆகிய இடங்களிலும் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
இதில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.