
அமித்ஷா வருகை … ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருவதை தடுத்து ரோடு சோ செய்ய வேண்டுமா? அகில உலக மதுரையர் இயக்கத்தினர் கண்டனம்!
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் முதல் நாள் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கப்பட்டது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் மாலை 5 மணி அளவில் நேதாஜி ரோட்டில் இருந்து மதுரை ஆதீனம் வரை ரோடு சோ செய்வதற்கு பிஜேபி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த இந்த நிகழ்ச்சிக்கு இன்று காலை முதல் இரவு வரை மதுரை நகர்ப்புறங்களில் எங்கும் செல்லாத வரை தடுப்புகள் அமைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது மதுரை மக்களின் மன வேதனை அளிக்கிறது. அலுவலகம் செல்பவர்கள், வணிகத்துக்காக செல்பவர்கள், வங்கிகளுக்கு செல்பவர்கள், மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் செல்வதற்கான வழிகளை அனைத்தும் அடைக்கப்பட்டு இடையூர் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இதற்கு மேலாக இன்று முதல் மதுரை திருவிழா ஆரம்பம் சாமி ஊர்வலம் வர இருக்கிறது இதை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருவதை தடுத்து இந்த ரோடு சோ செய்ய வேண்டுமா? இதற்கு தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுரையர் இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன். என அகில உலக மதுரையர் இயக்கத்தின் சார்பாக கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தென் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய பாராந்துகள் மற்றும் மகிழுந்துகள், கப்பலூர் சுங்க சாவடி அருகே 2 மணி நேரத்திற்கு மேலாக .., இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து பாதிப்பு பெரிதும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.