
பழிக்குப்பழி கொலையை தடுத்த தலைமைக் காவலர்… குவியும் பாராட்டுகள்!
பழிக்குப் பழியாக நடக்கவிருந்தகொலைச்சம்பவத்தை தடுத்ததலைமைக் காவலரை தென்மண்டல ஐஜி மற்றும் மாநகர்காவல் ஆணையர், மாவட்ட எஸ்பிஆகியோர் பாராட்டினர்.
மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி காவல் நிலைய தலைமைக் காவலர் திருக்குமரன்.தற்போது அயல் பணியாக தடயஅறிவியல் துறையில் பணிபுரிகிறார். இவர் அவனியாபுரத்திலிருந்து பணிக்குசெல்லும்போது தெற்குவாசல் பாலத்தின் நடுவில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 3 பேரைபிடித்து விசாரித்தார். அப்போதுஅவர்கள் ஒரு சாக்குப் பையை போட்டு விட்டு தப்பி ஓடினர். அந்தப் பையில் ஆயுதங்கள் இருந்தன.உடனே கீரைத்துரை போலீஸாரிடம் அவற்றை ஒப்படைத்தார். போலீஸார் விசாரித்து3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மூவரும்,பழிக்குப்பழியாக ஒருவரை கொலை செய்யும் நோக்கத்துடன் அங்கு கூடியிருந்தது தெரியவந்தது. இதில் தலைமைக்காவலரின் துரித நடவடிக்கையால் அச்சம்பவம் தவிர்க்கப்பட்டது. இதையறிந்த மாநகர் காவல்ஆணையரும், தென் மண்டல ஐஜியுமான நரேந்திரன் நாயர், மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத்ஆகியோர் தலைமைக் காவலர் திருக்குமரனை பாராட்டி சான்றிதழ்வழங்கினர். காவல் உதவிஆணையர் ராமகிருஷ்ணனும் அவரை அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார். தலைமைக்காவலர் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.