
திமுக சார்பில் மாவட்டத் துணைச் செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழக மதுரை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி அவர்களின் பிறந்தநாளன்று அரசியல் பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வந்தனர்.

அந்த வரிசையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூரில் அமைந்துள்ள ஆதரவற்றோர், மனநலம் பாதிக்க்கப்பட்டோர்கள் மற்றும் முதியோர்களை பாதுகாக்கும் மையமான செஷையர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கி அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூத்தியார்குண்டு சங்கர், தனசீலன், செந்தில், கருவேலம்பட்டி ராமன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலருடன் செஷையர் இல்லத்தின் பொறுப்பாளர்கள் முத்துராஜ் மற்றும் கோட்டக்காளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.