நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் இந்தியில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மேலும் ரகு தாத்தா, கண்ணிவெடி மற்றும் ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களும் கீர்த்தி சுரேஷ் கைவசம் உள்ளன. இந்த மூன்று திரைப்படங்களிலும் சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கிய பிரபல youtuber இர்பான். கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் பற்றிய தகவலை வெளியிட்டதால் இவர் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். இதற்காக மன்னிப்பும் கேட்டார் என தகவல் வெளிவந்தது.
வெளிநாட்டில் கீர்த்தி – இர்பான்
youtuber இர்பான் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இந்த நிலையில், youtuber இர்பான் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

துபாயில் நடக்கும் நிகழ்வு ஒன்றுக்கு சென்றுள்ள போது அங்கு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது. மேலும் இந்த பதிவில் கீர்த்தி சுரேஷ் குறித்து ‘சூப்பர் நைஸ் பெர்சன்’ என பதிவு செய்துள்ளார் இர்பான்.
இதோ அந்த புகைப்படம்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.