
ம சைவ சமயத்தின் மேன்மையை பறை சாற்றும் விதமாக சைவ சமய வகுப்புகள் ஆரம்பம்!
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் அவர்களின் அருளாணையில் மதுரை தானப்பமுதலியார் தெருவில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனக்கிளை மடத்தில் உள்ள ஸ்ரீநமசிவாய மூர்த்திகள் சன்னதியின் முன்பாக திருப்பூவணம் ஸ்ரீவேலப்ப தேசிகர் திருக்கூட்டத்தினர் நடத்திய சைவ சமய வகுப்பு இன்று மாலை நமசிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு ஆராதணையுடன் தொடங்கியது.
பின்னர் முருகன் மற்றும் கார்த்தி வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்வகுப்பில் ஸ்ரீமாதவச்சிவஞானயோகிகள், அருள்வரலாறு, கடவுள் வாழ்த்து, நூல் வழி வரையில் ஆகியவைகளை மதுரை பா.முத்துமாணிக்கம் அவர்கள் பாடமாக தொகுத்து வழங்கினார்.
இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக வகுப்பில் கலந்துக்கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் இந்த வகுப்பானது ஒவ்வொரு வாரம் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.