தலைவர் பிரபாகரன் வாழ்க..! திருப்பரங்குன்றத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் அவர்களின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகத் தமிழர்கள் அனைவராலும் இன்று கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்றத்தொகுதி திருநகர் 2வது பேருந்து நிறுத்தம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரை அரசு ராசாசி மருத்துவமனை இணைந்து மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்த நபர்களுக்கு பழங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டனர்.

பின்னர் மண் அரிப்பை தடுத்தவும் இயற்கை சூழலை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் நோக்கத்திலும் தோப்பூர் கண்காயல் பனை நாற்று நடப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண்ஜெயசீலன், திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து, குருதிக் கொடை பாசறை செயலாளர் நவீன் கண்ணன், இணை செயலாளர் இப்ராகிம், பொருளாளர் மணி முனீஸ்வரன், மதுரை மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வசந்த், தி.ப.கு பகுதி செயலாளர் செயலாளர் ஜெகன், தமிழ் பழங்குடியினர் பாசறை துணைச் செயலாளர் ராவணன், மகளிர் பாசறை சுபாசினி மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றியம்,நகரம் ,பகுதி,கிளைப் பொறுப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!