தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய கிளை துவக்க விழா

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை துவக்க விழா நிகழ்ச்சி தெற்கு வெளி வீதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி கிளை துவக்க விழாவிற்கு மதுரை மாநகராட்சி கிளை அமைப்பாளர் ஜோசப் ஜெயசீலன் வரவேற்றார். விழாவிற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்ட துணைச் செயலாளர் எமிமாள் ஞான செல்வி, மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வைத்தனர்.

விழாவிற்கு மாநிலச் செயலாளர் முருகன், மாநிலதுணைத்தலைவர் ஆரோக்கிய ராஜ், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாவட்ட செயலாளர் சந்திரன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர்கார்த்திகேயன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜரத்தினம், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி, மதுரை மாநகராட்சி ஆசிரியர் நல சங்க தலைவர் முருகன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளி மாவட்ட கிளை செயலாளர் தீனன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிறப்புரையாற்றிய பொதுச் செயலாளர் மயில், மதுரை மாநகராட்சியில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை சிற்றுண்டி உணவு திட்டம் வரவேற்கத்தக்கது என்றும், அவ்வாறு செயல்படுத்தப்பட்ட காலை சிற்றுண்டி மைய சமயற் கூடத்திற்கு அரசு விதிகளுக்கு புறம்பாக காலை 6 மணிக்கே ஆசிரியர்களை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என்றும், அரசுவிதி களுக்கு புறம்பாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஆசிரியர் களை கட்டாயப்படுத்தி காலை 6 மணிக்கே காலை சிற்றுண்டி தயாரிக்கும் மைய சமயற்கூடத்திற்கு அனுப்புவதை நிறுத்த வில்லை எனில், ஆசிரியர்களின் நலனுக்காக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போராட்டங்கள் தவிர்க்க இயலாதது என்றும் பேசினார்.

விழாவிற்கு மதுரை மாநகராட்சி கிளை அமைப்பாளர் வனஜா நன்றியுரை கூறினார். விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!