தனிநபர் ஆக்கிரமிப்பில் இருக்கும் நூற்றாண்டு பெருமைமிக்க மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றக் கள ஆய்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு
மதுரை மக்களுக்கு சொந்தமான, நூற்றாண்டு பழமையும் பாரம்பரியமும் பெருமையும் மிக்க பொதுச்சொத்தான விக்டோரியா எட்வர்டு மன்ற நூலகமானது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தனி நபரால் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்த மிகப்பெரிய நூலகம், அருங்காட்சியகம் போன்றவைகள் முறையான பேணுதலின்றி செயற்படாமல் போனபிறகு, எஞ்சியிருந்த மன்றத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தின் வாடகை மொத்தத்தையும் பொய்கணக்கு எழுதி அபகரித்துள்ள முறைகேட்டை வெளிக்கொணர்ந்து விக்டோரியா எட்வர்டு மன்றத்தை முழுமையாக மீட்டெடுக்கும் நோக்கில், வருகின்ற 09-09-2022 வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 03 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து மன்ற வளாகத்திலேயே பத்திரிகையாளர்களையும் சந்தித்து இப்பிரச்சினை குறித்து விவரிக்கவிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.