
வழியில் அதிவேகமாகச் சென்ற விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனம் சாலையோர வடைக்கடைக்குள் புகுந்ததால் சூடான எண்ணெய் தெரித்ததில் வடை கடை உரிமையாளர் மற்றும் வாகன ஓட்டி படுகாயம் காயம்
மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில்
அழகப்பன் நகர் அருகே சரவணா ஸ்டோர் என்னும் மிகப்பெரிய அங்காடி செயல்பட்டு வருகிறது இந்த பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் என்பது இருந்து வருகிறது இதனால் தடுப்புச் சுவர்களும் அமைக்கப்பட்டிருக்கிறது இருப்பினும் கூட பைக்கின் மீது தீராத காதல் கொண்ட இளைஞர்கள் அதிவேகமாக மதுரை மாநகரை சுற்றி வலம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணமாக வாகனத்தை இயக்குகிறார்கள் இந்த நிலையில் இன்று இரவு மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து அழகப்பன் நோக்கி வந்த விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து வாகனங்களில் மோதி சாலை ஓரமாக நடைபெற்று வரும் வடை கடைக்குள் புகுந்து விட்டது வடை கடையில் எண்ணெய் சூடாக இருந்ததால் எண்ணெய் தெரித்ததில் வடைகடையின் உரிமையாளர் மற்றும் இரண்டு சக்கர வாகன ஓட்டியும் படுகாயம் அடைந்துள்ளார் இருவரும் தற்சமயம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
பழங்காநத்தம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்
மதுரை மாநகரில் சாலைகளில் இரண்டு சக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது இவர்களால் பல பொது மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது போலீசார் இரும்பு கரம் கொண்டு
இவர்களை தடுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.