சூர்ய பிரகாஷ்
நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாயி. இப்படத்தை இயக்கிவர் சூர்யபிரகாஷ். இவர் ராஜ்கிரண் நடிப்பில் 1996ல் வெளிவந்த மாணிக்கம் எனும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படத்திற்கு பின் நான்கு ஆண்டுகள் கழித்து தான் சரத்குமாருடன் மாயி திரைப்படத்தில் இணைத்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மீண்டும் திவான் எனும் திரைப்படத்தில் இந்த கூட்டணி இணைந்தது.

இதன்பின் அதிபர் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் வரசநாடு எனும் திரைப்படத்தை சூர்யபிரகாஷ் இயக்கியிருந்த நிலையில், படம் தற்போது வரை வெளிவரவில்லை
மரணம்
இந்த நிலையில், இயக்குனர் சூர்யபிரகாஷ் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலகில் உள்ள பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர் சரத்குமார் தனது இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.