உங்கள் படங்கள் ஏன் ஓடுவதில்லை- கேட்கப்பட்ட கேள்விற்கு அஜித் கொடுத்த கோபமான பதில்

நடிகர் அஜித்

நடிகர் அஜித், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வழியை உருவாக்கி பயணித்து வருபவர்.

1993ம் ஆண்டு நடிக்க துவங்கியவர் கடந்த 30 வருடங்களாக ஹிட் படங்கள் கொடுத்து அசத்தி வருகிறார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் வேலைகளில் இருக்கிறார்.

இப்படத்தை முடித்த கையோடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறார், படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கூட தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

நீங்கள் நன்றாக நடித்தாலும் உங்கள் படங்கள் ஏன் ஓடுவதில்லை- கேட்கப்பட்ட கேள்விற்கு அஜித் கொடுத்த கோபமான பதில் | Ajith Angry Reply For His Failure Movies

பழைய பேட்டி

இந்த நிலையில் நடிகர் அஜித்தின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அந்த பேட்டியில் சமீபகாலமாக நீங்கள் நடிக்கும் படங்களில் உங்கள் நடிப்பு நன்றாகவே இருந்தாலும் சரியாக ஒடுவதில்லை.

நீங்கள் சரியாக கதையை தேர்வு செய்யாதது தான் காரணமா என கேட்டுள்ளனர்.

அதற்கு கோபத்தில் அஜித், நான் ஒரு நடிகன், நடிப்பது மட்டும் தான் என் வேலை. படம் ஓடினால் இயக்குனர் காரணம், தோற்றால் நான் எப்படி காரணம் ஆக முடியும்.

ஒரு படம் எப்படி ஓடுகிறது என தெரிந்தால் நான் இயக்குனர் ஆகியிருப்பேன், நடிகராக இருந்திருக்க மாட்டேன்.

படம் ஓடவில்லை எனில் அது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் தவறுதானே தவிர என்னுடைய தவறு அல்ல என பேசியிருப்பார். 

நீங்கள் நன்றாக நடித்தாலும் உங்கள் படங்கள் ஏன் ஓடுவதில்லை- கேட்கப்பட்ட கேள்விற்கு அஜித் கொடுத்த கோபமான பதில் | Ajith Angry Reply For His Failure Movies

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!