
காவல்நிலையம் வழியாக சென்ற விஜயகாந்த் உடல்.. துப்பாக்கியை உயர்த்தி பிடித்து சல்யூட் அடித்த காவலர்கள்…!
காக்கி சட்டைக்கும் காவல்துறையினருக்கு எப்போதும் தனி மரியாதையை பெற்றுக்கொடுத்தவர் விஜயகாந்த். காவல்துறை அதிகாரியாக அவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. மேலும் தமிழ் திரையுலகிலேயே அதிக அளவில் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்த ஒரே நடிகர் விஜயகாந்த்தான் என கூறப்படுகிறது.
அதை மனதில் வைத்துதான் இன்றைக்கு விஜயகாந்தின் உடல் விருகம்பாக்கம் காவல் நிலையம் வழியாக கொண்டு செல்லப்பட்ட போது காவல்துறையினர் துப்பாக்கியை உயர்த்தி பிடித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ் திரையுலகிலேயே அதிக அளவில் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்த ஒரே நடிகர் விஜயகாந்த்தான் என கூறப்படுகிறது. அதிலும், இவர் காவல் அதிகாரி வேடமிட்டு நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் அவரது அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் திரை பிரபலங்கள் ரசிகர்கள் கட்சி நிர்வாகிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இன்னும் சற்று நேரத்தில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.