விடைபெற்றார் விஜயகாந்த்! விண்ணில் பாய்ந்த குண்டுகள் – மண்ணில் புதைந்த ‘கேப்டன்’

விடைபெற்றார் விஜயகாந்த்! விண்ணில் பாய்ந்த குண்டுகள் – மண்ணில் புதைந்த ‘கேப்டன்’

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு இன்று காலை 6 மணி முதல் பகல் 4 மணி வரை தீவுத் திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருந்து.

அப்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், தேமுதிக தொண்டர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலிலிருந்து புறப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்த்தின் உடல் கண்ணீர் மல்க மிதந்த வந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதியாக அஞ்சலி செலுத்தினர். மனைவி பிரேமலதா விஜயகாந்த், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அனுசலி செலுத்தினர்.

விஜயகாந்தின் இறுதி சடங்கில் ஆளுநர், முதல்வர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் பங்கேற்கின்றனர்.

விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட குடும்ப உறுப்பினர்ள் உட்பட 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.கேப்டன் விஜயகாந்தின் இறுதி சடங்கை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாயிலில் பெரிய LED திரை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 72 குண்டுகள் முழங்க தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!