துணை போகும் திமுக…மல்லாந்த மக்கள் பிரதிநிதிகள்… களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடகோட்டை கிராமத்தில் தனியார் சோலார் நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தசூழ்நிலையில் இன்று இப்பகுதி பொது மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். போராட்டம் செய்தவர்கள் அனைவரையும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

நடக்கோட்டை கிராமத்தின் மக்களுக்குச் சொந்தமான சுமார் 90 ஏக்கர் நிலங்களை அரசு அதிகாரிகளின் துணையோடும் காவல் துறையின் துணையோடும் ஆக்கிரமித்து சோலார் மின் தகடுகளை திமுக அரசின் ஆசிபெற்ற நிறுவனமான ராபின் பவர் சொல்யூசன்ஸ் நிறுவனம் பதித்து வருகிறது.

அதிகாரம் பணம் ஆகியவைகளை பயன்படுத்தி காவல்துறையை வைத்து மக்களை அச்சுறுத்தியும், போராடவிடாமல் தடுத்தும் இருந்தனர்.
மொத்தமாக 500 ஏக்கர் அரசு நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்திருக்கும் அந்நிறுவனம் அனைத்துக்கட்சியினரையும் விலைக்கு வாங்கிவிட்டனர்.
இந்தக்கட்சிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு வெற்றிபெற்ற மக்களின் பிரதிநிதிகள், நிறுவனத்திடம் பணத்தைப்பெற்றுக்கொண்டு மல்லாந்து படுத்துவிட்டனர்.

விவசாய நிலத்தை வணிக நிறுவன நிலமாக மாற்றுதல், விவசாய நிலத்தைச் சுற்றி பாதையை மறைத்து வேலியிடுதல், நீர்வரத்து ஓடைகளை மண்போட்டு மறித்தல், இயற்கையாக ஓங்கி வளர்ந்திருந்த மரங்களை அழித்தல், சோலார் தகடுகளை கழுவ தினமும் லட்சக்கனக்கான லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்ச ராட்சத ஆழ்குழாய் அமைத்தல் இப்படி பல சட்டவிரோத செயல்களை துணிந்து இந்நிறுவனம் செய்யக்காரணம் இது ஆளும் திமுக அரசின் பினாமி நிறுவனம் என்கிறார்கள் மக்கள்.

மக்களின் நில உரிமையை, வளங்களை, நலங்களை பாதுகாக்கவே பிறந்த கட்சி நாம் தமிழர் கட்சி இம்மக்களின் உரிமைக்காக கடைசி வரை களத்தில் நிற்க்கும் என்ற உறுதியோடு
அந்நிறுவன முற்றுகை போராட்டத்தில் மக்களோடு நிற்போம் என அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்
பொறியாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!