இலங்கை விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாத்துறை உத்தரவு. ‘கொரானா தொற்று பாதித்த தாய் , மகள் இருவரையும் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கொரோனா பி எப் 7 தொற்று குறித்து கடந்த மூன்று நாட்களாக விமான நிலையத்தில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இன்று காலை 9.40 மணியளவில் இலங்கையில் இருந்து இந்தியா வந்த ஏர் லங்கா விமானத்தில் 70 பயணிகள் மதுரை வந்தனர்.
இந்நிலையில் சீனாவில் இருந்து இலங்கை மூலம் மதுரை வந்த பயணியிடம் கொரோனாத் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மதுரை விமான நிலையம் வந்த பயணி 39 வயது பெண் மற்றும் அவரது மகள் (வயது 6) குழந்தைக்கும் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கியுள்ள பிரதிபா மற்றும் குழந்தை பிரித்தியங்கார வை சுகாதாரத்துறை அதிகாரிகள் 15 நாட்கள் தன்மை படுத்தியுள்ளனர். இவரது கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் மனைவி மற்றும் குழந்தையும் சேர்ந்து இருந்துள்ளனர். தற்போது சுப்பிரமணியம் வேலைக்காக ஜெர்மனி சென்றுள்ளார். இதனால் குடும்பத்தினர் தமிழகம் திரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்த நிலையில் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் தீவிர பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் இலங்கை விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.