
ஆரா என்ற குறும்படத்தின் முதல் பார்வை வெளியீட்டு நிகழ்வை முன்னிட்டு, ’இந்த குறும்படம் முழு திரைப்படமாக வளர வேண்டும்’ என்று பலரும் வாழ்த்தி உள்ளனர்.
விருந்தினர் தயரிப்பு நிறுவனம் இசக்கிமுத்து தயாரிப்பில் சிவா வெங்கடாசலம் இயக்கத்தில் அருண் மற்றும் சரன் ஒளிப்பதிவில் மன்சி இசையில் விரைவில் வெளிவரவிருக்கும் ஆரா படத்தின் First look Poster-ஐ நடிகர் ப்ரஜின் மற்றும் விருந்தினர் தயாரிப்பு நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்டனர்.
இது குறித்து இயக்குனர் சிவா வெங்கடாசலம் பேசும்போது, ஆரா என்றால் உடலுக்கும் மனசுக்கும் இடையில் பிரதிபலிக்கும் செயலே ஆகும். ”இப்போதெல்லாம் குறும்படங்கள்தான் பெரிய திரைப்படங்களாக வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன.

அந்த வகையில் ‘ஆரா’ குறும்படமும் பெரிய திரைக்கு வர வேண்டும்; சாதிக்க வேண்டும்’’ ”பெரிய படம், குறும்படம், மீடியம் படம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. படம் நன்றாக இருந்தாலே, அதனை மக்கள் கொண்டாட தவறுவதில்லை. இன்று நிறைய குறும்படங்கள் தான் பெரிய படங்களுக்கு ஏணிப்படியாக அமைகின்றன’’ தற்போதைய இளைஞர்கள் வன்முறை செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதை உணர்த்தும் படமாக இப்படம் அமைந்துள்ளது என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.