மீனவர்களை விரட்டும் திராவிட கும்பல்: வயிற்று பிழைப்புக்காக வட மாநிலத்தவர் வந்தால் பாவம்… பூர்வகுடி மீனவர்கள் பாவம் இல்லையா? – சீமான் ஆவேசம்

சமாதி கட்டுற வேகத்தை… சந்தை கட்டுவதில் காட்டவில்லை…

சென்னை, நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையோரம் வரையுள்ள மீன் கடைகள், உணவகங்களை அகற்ற அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 12-ம் தேதி கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் அந்தப் பகுதியில் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கின்றனர். இந்த நிலையில், மீனவர்களின் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.மீனவ மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த சீமான், அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “மீனவர்கள் மீன் விற்கும் இந்தச் சாலையைப் பள்ளி மாணவர்கள் சென்று வருவதற்காகத்தான் எனத் தெரிவித்து அரசு இதைக் கையகப்படுத்திக்கொண்டது. இந்தச் சாலையில், மீன்கடை வைத்திருப்பவர்கள் கட்டடமோ, தகரக் கொட்டகையோ அமைத்துக்கொண்டு இடத்தை ஆக்கிரமிக்கவில்லை. பெரிய குடையை வைத்துக்கொண்டு அதன் நிழலில் அமர்ந்து, மீன் விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

படகு கரை சேருகிற இந்தப் பகுதியிலிருந்து மீன்களை வாங்கி வந்து இங்கு விற்கிறார்கள். அவர்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காக வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் பாவம் பார்க்கும் நீங்கள் … மீனவர்கள் மட்டும் வாழ்வாதாரத்திற்காக மீன் விற்று பிழைப்பது பாவம் இல்லையா…

நீங்கள் மீன் சந்தை கட்டித்தரும் வரை மீன்களை நாங்கள் விற்கக் கூடாதா… கடற்கரையில் மீன் விற்கக் கூடாது எனத் தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்தான், உலகப் புகழ்பெற்ற உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையில் சமாதி கட்ட அனுமதி தந்தது. கடற்கரையோரத்தில் மீன் விற்கக் கூடாதாம். ஆனால், கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் வைக்கலாமா…

இந்தக் கேள்விக்கு அரசிடம் பதில் இருக்கிறதா… சமாதி கட்டுவதில் காட்டும் ஆர்வம் சந்தையைக் கட்டுவதில் இல்லையே?எங்கள் பகுதியை விட்டுவிட்டு வேறு ஒரு தூர இடத்தில் நீங்கள் மீன் சந்தையைக் கட்டித் தருகிறீர்கள் என்றால், இங்கிருந்து அந்தச் சந்தைக்கு மீன்களைத் தூக்கிக்கொண்டு போய் விற்று வருவதற்கான தூக்குக் கூலியே எங்களின் உழைப்பை எடுத்துவிடுமே… அதற்கும் அரசிடம் பதில் இருக்காது” என்

றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!