அனார் பார்க் தர்கா இடிப்பு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திருச்சி : தென்னூர் வக்பு வாரியத்திற்கு சொந்தமான உழவர் சந்தை அருகே உள்ள அனார் பார்க் தர்காவை நள்ளிரவில் இடித்து பதற்றத்தை ஏற்படுத்திய சமூக விரோதிகளை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .அனார் பார்க் தர்காவை இடித்த உண்மை குற்றவாளிகளை அனைவரையும் எந்தவித பாரம் பட்சம் பார்க்காமல் உடனடியாக கைது செய்ய வேண்டும் மேலும் இடிக்கப்பட்ட தர்காவை மீண்டும் அதே இடத்தில் உடனடியாக கட்டி தர வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது .தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களை தனிநபர்கள் ஆக்கிரமைப்பு செய்து வைத்திருக்கின்றனர்? வக்பு இடங்களை உடனடியாக ஆய்வு செய்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்துகிறோம். எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறி

யுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!