நிறத்தை மாற்றும் அதிசய விநாயகர்

6 மாதம் வெள்ளை, 6 மாதம் கருப்பு என நிறத்தை மாற்றும் அதிசய விநாயகர்

உலகில் நாள்தோறும் ஏதோ ஒரு மூலையில் எண்ணற்ற அதிசயங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதனை பலரும் அறிவதில்லை.

கருப்பு வெள்ளையாய் கலர் மாறும் அதிசய விநாயகர்..!!

தை முதல் ஆனி வரை உள்ள காலத்தில் வெள்ளை நிறமாகவும்,ஆடி முதல் மார்கழி வரை கருப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார் இந்த விநாயகர்..!!

அவ்வாறு விநாயகர் கோவில் ஒன்றில் இருக்கும் விநாயகர் சிலை 6 மாதம் வெள்ளை, 6 மாதம் கருப்பு என்று மாறி மாறி காட்சியளிக்கின்றது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கேரளபுரம் என்ற ஊர் உள்ளது. அங்கு தான் அந்த அதிசய விநாயகர் அவதரித்துள்ளார். அவருக்காக அழகிய ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோயிலின் அதிசயத்தைப் பற்றியும், அதன் மகிமைகளைப் பற்றியும் காணலாம்.

அதிசயம் என்ன?

இந்த இடத்தில் உள்ள பிள்ளையார் சிலை ஆறுமாதம் வெள்ளையாகவும், ஆறு மாதம் கருப்பாகவும் காட்சி தருகிறது.

இங்குள்ள விநாயகரின் நிறத்தைப் பொறுத்து இந்த பிள்ளையார் அமர்ந்துள்ள அரசமரமும் நிறமாறுகிறதாம். இங்கு ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நடக்கும் அதிசயத்தை இங்கு வரும் பக்தர்கள் விநாயகரின் விளையாட்டு என்று கொள்கின்றனர். தற்போது ஒன்றரை அடி உயரம் உள்ள விநாயகர் ஆரம்பத்தில் அரை அடி உயரம் இருந்ததாக கூறப்படுகிறது.

பிரதிஷ்டை செய்தது யார் தெரியுமா?

திருவிதாங்கூர் மன்னர் வீரகேரள வர்மா இந்த சிலையை குமரி மாவட்டத்திலுள்ள தக்கலை எனும் ஊரில் அமைந்துள்ள அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்தார். நிறம் மாறும் விநாயகர் இவரை நிறம் மாறும் விநாயகர் என்றே அங்குள்ளவர்கள் அழைக்கின்றனர்.

தை முதல் ஆனி வரை உள்ள காலத்தில் வெள்ளை நிறமாக காட்சியளிக்கிறார் இந்த விநாயகர். ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலத்தில் கறுப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார் இந்த விநாயகர்.

ஆடி மாதம் தொடங்கும்போது பிள்ளையாரின் தலை உச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்கும்.

இதுவே தை மாதம் தொடங்குகையில் மெல்ல மெல்ல பாதம் கறுக்கத் தொடங்குகிறது. ஆறாம் மாதம் வரை வெள்ளை நிறம் அப்படியே இருக்கும்.

Leave a Reply

error: Content is protected !!