புதிய வகை கொரோனா பரவல் – மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை.

புதிய வகை கொரோனா தொற்றான BF-7 எனப்படும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி சுகாதாரத் துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் உத்தரவின்படி மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் நாளை முதல் செயல்படுத்தப்படும்.

விமான நிலைய உள் வளாகத்திற்குள் வருபவர்களுக்கு 2 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அல்லது கொரோனா நோய் இல்லை என சான்று வைத்திருக்கவேண்டும். முக்கியமாக முக கவசம் கண்டிப்பாக அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் சிங்கப்பூர் ,இலங்கை, துபாய், சார்ஜாவில் இருந்து விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பயணிகள் மதுரை வருகின்றனர்.

தற்போதுள்ள சூழ்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் எக்ஸ்பிபி எனப்படும் கொரோனா வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை மீண்டும் நாளை முதல் தொடங்கும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2% சதவிகிதம் அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் இதில் வரும் நோய்களுக்கு பாசிட்டிவ் என தெரிந்தால் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் முகவரியில் உள்ள மாவட்டங்களுக்கு தகவல் அனுப்பி அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!