மக்களே உஷார்: youtube-ல் காய்கறி விற்பனை விளம்பரம்… 1.20 லட்சம் ரூபாய் மீட்பு… எச்சரிக்க்கும் காவல்துறை!

ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை உரியவர்களுக்கு மீட்டுக்கொடுத்த திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியை சேர்ந்த மனோகரன்(63) என்பவர் You Tube யில் வந்த காய்கறி விற்பனை செய்வது சம்பந்தமான விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு காய்கறி வியாபாரம் செய்வதற்காக ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார்.

அதேபோல் திருநெல்வேலி மாவட்டம், மல்லக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுகுமார் என்பவர் Facebook யில் வந்த விளம்பரத்தில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் உள்ளதாக வந்துள்ளது. அதை பார்த்து நம்பி அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட நபரிடம் ஆன்லைனில் முதலீடு செய்வதற்காக ரூபாய் 20 ஆயிரம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளார்.

இந்நிலையில் மனோகரன் மற்றும் ஜேசுகுமார் ஆகிய இருவரும் பணத்தை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்ததன் பேரில் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ் அவர்கள் தலைமையிலான சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் அவர்கள் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக மனோகரன் என்பவருடைய ரூபாய் 1 இலட்சத்து 10 ஆயிரம் பணத்தையும், ஜேசுகுமாரின் ரூபாய் 20 ஆயிரம் பணத்தையும் மீட்டு அதற்கான ஆவணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.மேலும் இதுபோன்று இணையவழி குற்றம் செய்பவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் இணையதளங்களில் தேவையில்லாத விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும், சைபர் கிரைம் புகார்களுக்கு https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் கிரைம் தொலைபேசி எண்ணிலோ புகார் அளிக்கவும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்

.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!