”தீயணைப்பு வீரர்கள் ஒருபோதும் தங்கள் கடமையிலிருந்து தவறுவதில்லை!’ எல்லாரையும் எப்பொழுதும் தமக்கு முன்பாக வைத்து, உயிரை பணயம் வைத்தாலும் அவர்களைக் காப்பாற்றும் இந்த தூய ஆன்மாக்களுக்கு இந்த சொற்றொடர் முற்றிலும் பொருத்தமானது. இவர்கள் தங்களது மக்களுக்காக செய்யும் தியாகத்தை வர்ணிக்க சொற்கள் போதாமை இருந்தாலும், அவர்களின் சில மனதைக் கவரும் செயல்கள் என்றென்றும் நம் இதயங்களில் நீங்காத இடம்பெற்றுவிடும்.
அந்த வகையில் மதுரை சத்யசாய் பகுதியை சேர்ந்த பரமன் தனது குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் கோவிலில் தீபத் திருவிழாவில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிய பொழுது கட்டிட இடிபாட்டிற்குள் கழிவுநீர் குழாயில் சிக்கிய நாய்க்குட்டி கத்திக் கொண்டிருந்ததை அறிந்த அவரது மகள் பிரியதர்ஷினி (23) அந்த நாய்க்குட்டியை காப்பற்ற வேண்டும் என தன் தந்தையிடம் கூறியுள்ளார்.
‘இதெல்லாம் வேணாம் சாப்பிட்டு வந்து தூங்கு’ என அவரது தந்தை கூற, நாய்க்குட்டியின் சத்தத்தை கேட்ட பிரியதர்ஷினியால் சாப்பிடவும்,தூங்கவும் மனம் இல்லாமல் அக்குட்டியை காப்பாற்றியே ஆகவேண்டும் என்று நினைத்து, ஒரு மணி நேரமாக பல்வேறு வகையில் உதவி கேட்டு கொண்டிருந்தார். அப்போது நாய்க்குட்டியை காப்பாற்ற பல விலங்குகள் மீட்பு எண்களை தொடர்ந்து முயற்சித்த அவர் விலங்குகளை மீட்டுதல் குறித்து இணையதளத்திலும் தேடப்பட்டார் அப்போது விலங்கியல் ஆர்வலர்களான பாண்டி கோவில் பகுதியை சேர்ந்த சாய் மையூர் மற்றும் டி.வி.எஸ் நகர் பகுதியை சேர்ந்த இருவரையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார் இளம்பெண் பிரியதர்ஷனி.
பின்னர் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்து விட்டு விலங்கியல் ஆர்வலர்களும், பெரியார் நிலைய தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி கட்டிட இடிபாட்டிற்குள் இருந்த கழிவுநீர்கழாய்க்குள் சிக்கி இருந்த நாய் குட்டியை மீட்டு தாயுடன் சேர்த்தனர்.இந்நிகழ்வு குறித்து பலரும் நெகழ்ச்சி அடைந்த நிலையில் இளம்பெண் பிரியதர்ஷினி,விலங்கியல் ஆர்வலர்கள் சாய் மையூர், முரளி மற்றும் தீயணைப்பு துறையினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து விலங்கியில் ஆர்வலர்கள் சாய் மையூர், முரளி ஆகியோர் கூறியதாவது:

மனிதர்களை மட்டுமின்றி, வாயில்லா உயிர்களின் உயிரையும் காப்பாற்றியதற்காக நாங்கள் தீயணைப்புத்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நாய்க்குட்டியை காப்பாற்ற பல விலங்குகள் மீட்பு எண்களை தொடர்ந்து முயற்சித்த இளம் பெண் பிரியதர்ஷினிக்கு நான் குறிப்பாக நன்றி சொல்ல விரும்புகிறேன்.
பிரியதர்ஷினியின் பெற்றோர் அவரை வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சொல்லியுள்ளார்கள், ஆனால் நாய்க்குட்டி மீட்கப்படும் வரை தூங்க முடியாது என்று சொல்லி பல முயற்சிகளை மேற்கொண்டு நாய்க்குட்டி மீட்கப்பட்டது.
நம் நாட்டில் கருணை உள்ளம் கொண்ட இளைஞர்கள் அதிகம் தேவை எனவும் அனைத்து விதமான விலங்குகளை விபத்துகளில் இருந்து மீட்க அவசரம் எண் 112 பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.