திருப்பரங்குன்றம் அருகே சொக்கப்பனை தீபம்… பக்தர்கள் பரவசம்.!

திருப்பரங்குன்றம் அருகே சொக்கப்பனை தீபம்… பக்தர்கள் பரவசம்.!

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அகல் விளக்குகளை ஏற்றி செவ்வாய்க்கிழமை வழிபட்டனா். மேலும், கோயில்களில் தீபமேற்றுதல் மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

காா்த்திகை மாதத்தில் பௌா்ணமி நாளில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் சிறப்புக்குரியது. இறைவன் ஜோதி வடிவாகக் காட்சியளித்ததை எடுத்துரைக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. நிகழாண்டுக்கான காா்த்திகை தீபம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டிசெவ்வாய்க்கிழமை மாலை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குத்துவிளக்குகள், அகல் விளக்குகளில் விளக்கேற்றி வழிபட்டனா். குறிப்பாக திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் சுவாமி திருக்கோயிலில் மகா தீபம் ஏற்றிய பின்னரே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றினா். இதைத் தொடா்ந்து மத்தாப்பு உள்ளிட்டவற்றை கொளுத்தியும், வெடிகளை வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டு முக்கிய வீதிகளில் சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் இதைத் தொடர்ந்து திருப்பரங்குவதற்கு அருகே உள்ள நிலையூர் ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு என்ற சதுர்வேதமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சொக்கநாதர், மீனாட்சி மற்றும் கால பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கோவில் வாசலில்  சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!