திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 5ல் தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபதிருவிழா டிசம்பர் 5 தொடக்கம்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபதிருவிழா டிசம்பர் 05-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

முதல் நாளான 5 -தேதி பகல் 12.15 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. தினமும் ஒரு வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12 -ந்தேதி கோவிலுக்குள் 6 கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக -13ந்தேதி) மாலை 6 மணிக்கு மேல் கோவிலுக்குள் பாலதீபமும், திருப்பரங்குன்றம் மலை உச்சி பிள்ளையார் கோயில் மேல் மகா கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது.

இரவு 8 மணியளவில் சன்னதி தெருவில் 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
14 ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!