மதுரையில் போக்குவரத்து காவல் துறை சார்பில் ‘விபத்தில்லா பயணம்’ காணொளி மூலம் விழிப்புணர்வு

மதுரையில் போக்குவரத்து காவல் துறை சார்பில் ‘விபத்தில்லா பயணம்’ காணொளி மூலம் விழிப்புணர்வு

மதுரையில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா தலைமையில் மதுரை மாநகரின் 3 முக்கிய இடங்களில் நடைபெற்றது.

பாதுகாப்பான பயணம் தொடர்பான இந்த விழிப்புணர்வு நிகழ்வின் போது நகரும் வாகனத்தில் பொருத்தப்பட்ட பெரும் திரையில் ‘விபத்தில்லா பயணம் தொடர்பான வீடியோ படங்கள் காட்டப்பட்டன. இதனை பொது மக்கள் திரண்டு வந்து ஆர்வத்துடன் பார்த்தார்கள்.

மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் ஆலோசனையின்படி மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேசன் மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து துறை சார்பில் சார்பில் இன்று(12.12.24) காளவாசல் மற்றும் குரு தியேட்டர் ஆரப்பாளையம் பகுதிகளில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனந்த் பள்ளியில் மாணவர்களுக்கு…காணொளி மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியின் போது வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் வண்டிகளை ஓட்டிச் செல்வது தொடர்பாக பிரச்சார வாகனத்தில் பெரும் திரையில் விழிப்புணர்வு வீடியோக்கள் ஒளிபரப்பானது. இதனை பொது மக்கள் ஆர்வத்துடன் திரண்டு நின்று பார்த்தனர்.

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் எஸ் வனிதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மானேஜ்மென்ட் அசோசியசன் தலைவர் மற்றும் மதுரை மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினர் சண்முக சுந்தரம் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஏ.தங்கமணி போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன் போக்கு வரத்து துணை ஆய்வாளர் சந்தானம் மானேஜ்மென்ட அசோசியெசன் துணை தலைவர் ரவிபாலு பட்டிமன்ற பேச்சாளர் கோ மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வின்போது சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!