
‘ஆத்தி போலீசு’.. தலைதெறிக்க ஓடிய திமுக கவுன்சிலரின் மகன்.. பட்டாக் கத்திகளுடன் சிக்கியது எப்படி?
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் கொலை உள்ளிட்ட சில குற்றச் செயல்கள் நடக்க இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசியத் தகவலின் பேரில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார், நேற்று முன்தினம் இரவு ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது, ராமாபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் ரோந்து சென்ற போது, கத்தியுடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, போலீசாரைக் கண்டதும், அந்த நபர் தப்பியோடி உள்ளார். பின்னர், போலீசார் அந்த இடத்துக்குச் சென்று பார்த்த போது, அங்கு இரண்டு பட்டா கத்திகள் கிடந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், தப்பியோடிய நபர், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி ஒன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் லில்லி என்பவரின் மகன் கோகுல்நாத் (24) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் நின்று கொண்டிருந்ததும், அவரின் வீட்டு அருகிலே என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். அதில், மேலும் சில பட்டாக் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து, தப்பியோடிய கோகுல்நாத்தை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.