2024 கார்த்திகை அமாவாசை சனிக்கிழமையா அல்லது ஞாயிற்று கிழமையா?

2024 கார்த்திகை அமாவாசை சனிக்கிழமையா அல்லது ஞாயிற்று கிழமையா?

கார்த்திகை மாதத்தில் வரும் முக்கியமான விரத நாட்கள் மற்றும் திதிகளில் ஒன்றுதான் தை அமாவாசை. பொதுவாகவே திதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படும் விசேஷம் மற்றும் விருது நாட்களை பொருத்தவரை சூரிய உதயத்தில் என்ன திதி இருக்கிறதோ அதைத்தான் அந்த நாளுக்கான திதியாக கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.

அதேபோல சூரிய உதயத்தில் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அந்த நட்சத்திரம் தான் அந்த நாளின் நட்சத்திரமாக கணக்கிடப்படும். ஆனால், சில அமாவாசை திதிகள், அந்த கணக்கீடுகளின் படி எடுத்துக் கொள்ள முடியாது. அதன் படி, இன்று 3௦ நவம்பர் 2024 அன்று, இன்றைய திதியாக அமாவாசை காலை 10:30 மணிக்கு மேல் பிறக்கிறது என்பதால், கார்த்திகை அமாவாசை எந்த தேதியில் வருகிறது என்ற குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கார்த்திகை அமாவாசை 30 நவம்பர் 2024 சனிக்கிழமை அன்று வருகிறது அல்லது 1 டிசம்பர் 2024 அன்று வருகிறதா?கார்த்திகை 2024 அமாவாசை: இன்றைய திதி என்ன? திதி எப்போது தோன்றுகிறது, எப்போது முடிகிறது, நட்சத்திரம் எந்த நேரத்தில் பிறக்கிறது எப்போது முடிகிறது என்பதெல்லாம் நம்முடைய ஆங்கில காலண்டர் அல்லது கடிகாரத்தின் அடிப்படையில் இல்லை. பஞ்சாங்கத்தின்படி நாழிகைகளின் கணக்குப்படி தான் திதி தொடங்கும் நேரம் முடியும் நேரம் நட்சத்திரம் மாறும் நேரம் ஆகியவை கணக்கிடப்படுகிறது.

பஞ்சாங்கத்தின் படி, அமாவாசை திதி, 30 நவம்பர் 2024 காலை 10:30 மேல் துவங்கி, 1 டிசம்பர், 2024 காலை 11:50 மணிக்குள் முடிகிறது.ஞாயிற்றுக்கிழமை அமாவாசை நேரம் அரை நாள் கூட இல்லை என்பதால், சனிக்கிழமை அமாவாசையாக இன்று காலை அனுஷ்டிக்கப்படும். டிசம்பர் அமாவாசை 2024, டிசம்பர் மாத இறுதியில் வரும்.தர்ப்பணம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்தர்ப்பணம் செய்வது என்றால், கருப்பு எள்ளை நீரில் கலந்து முன்னோர்களை நினைத்து மந்திரம் சொல்லி, பூமிக்கு சமர்ப்பணம் செய்வது தான். முன்னோர்களை நினைத்துக் கொண்டு, கருப்பு எள்ளை எடுத்துக் கொண்டு, தண்ணீருடன் கலந்து ஏதேனும் மரத்தடியில் மூன்று முறை ஊற்றினாலே, அமாவாசை தர்ப்பணம் செய்ததாகும்.2024 கார்த்திகை அமாவாசை, சனிக்கிழமை அமாவாசையாக வருவதால் அன்று தர்ப்பணம், திதி கொடுக்க முடியாதவர்கள், அரிசி வாழக்காய் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கலாம். அனைத்து அமாவாசை தினங்களில் பசுவிற்கு அகத்திக்கீரை, கோதுமை தவிடு, பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கலாம்.Disclaimer: இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படி எழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!