சாலையில் கழிவுநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

சாலையில் கழிவுநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் கூத்தியார்குண்டு பஸ் ஸ்டாப் ( திருமங்கலம் – மதுரை செல்லும் வழி) அருகே கழிவுநீர் தேங்கி சகதியாக உள்ளதால் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நீண்ட‌ நாட்களாக கழிவுநீர் தேங்கி சேரும், சகதியுமாக உள்ளதால் அதனை கடந்து செல்ல முடியாமல் பேருந்து பயணிகள் அவதி அடைகின்றனர். மேலும் பேருந்து மழைநீர் தேங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி சாலையில் நின்று பயணிகளை ஏற்றவதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த பகுதிகளில் எந்நேரமும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாலையில் தேங்கி உள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!