தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்களில் துணை நடிகராக வலம் வரும் சாய்பாபாவின் போட்டோ ஷுட் வைரலாக பரவி வருகிறது.

பட்டி தொட்டி எங்கும்:
திருப்பாச்சி 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2004-ல் வெளியான கில்லி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

இத்திரைப்படத்தில் விஜய் தங்கையின் கணவராக நடித்து தமிழ் சினிமாவில் பட்டி தொட்டி எங்கும் தடம் பதித்து தமிழ் சினிமாவில் பல வாய்ப்புகளை பெற்றவர் சாய்பாபா.

மேலும் விஜய் நடித்த சிவகாசி, சீமான் இயக்கத்தில் வெளிவந்த வாழ்த்துகள், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ஆதவன், உள்ளிட்ட ஜெயம் ரவி நடித்த பூலோகம், சரத்குமார் நடித்த வைத்தீஸ்வரன், ஜீவா நடித்த திருநாள், ஆர்யா நடித்த கடம்பன், பூவரசன் பீப்பி போன்ற பல படங்களில் துணைநடிகராக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

இவர் சமீபத்தில் போட்டோஷூட்டுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வந்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சரத்குமார், ஜீவா, மாதவன், ஆர்யா, உள்ளிட்ட பலரிடம் துணை நடிகராக நடித்திருந்தார் தற்போது சிம்புவின் பத்துத்தலை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரலாகும் போட்டோஷுட் வைரலாகும் போட்டோஷுட்
இந்நிலையில் இவரின் சமீபத்திய போட்டோ ஷூட் -ஐ சமூக வலைதளங்களில் பதிவிட்டது அனைவரையும் கவர்ந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.