அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய ஹரி.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஹரி, அடுத்ததாக இயக்கும் படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்க உள்ளார். தற்காலிகமாக ‘அருண் விஜய் 33’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னரே வெளியிட்ட படக்குழு, படத்திற்கான முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது. தற்போது முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

இது, இயக்குநர் ஹரியின் 16-ஆவது படமாகும். பழனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!