கடந்த 50 வருட சர்வதேச கிரிக்கெட் உலகின் சிறப்பான கேப்டனாக எம்எஸ் தோனி விளங்கியதாக முன்னாள் இந்திய பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய ஜாம்பவானுமான கிரெக் சாப்பல் தெரிவித்துள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளில் ஜாம்பவான்களாக திகழ்ந்த மைக்கேல் பிரியர்லி, இயான் சாப்பல், மார்க் டெய்லர், கிளைவ் லாய்ட் உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் இணைத்து பார்க்கக்கூடியவர் கேப்டன் தோனி என்றும் சாப்பல் கூறியுள்ளார்.
மேலும் அவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை காட்டிலும் அதிகமாகவே திறமைகளை வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. சர்வதேச அளவில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்தியாவின் முன்னாள் கோச் கிரெக் சாப்பல் உள்ளிட்டவர்களுக்கும் தோனி எப்போதும் விருப்பத்திற்குரியவராக உள்ளார்.
ஜாம்பவான்களுடன் இணைத்து பார்க்கக்கூடியவர்இந்நிலையில் கடந்த 50 வருட சர்வதேச கிரிக்கெட் உலகில் சிறப்பான கேப்டனாக எம்எஸ் தோனி விளங்கியதாக கிரெக் சாப்பல் தெரிவித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகாலங்களில் ஜாம்பவான்களாக விளங்கிய இங்கிலாந்தின் மைக்கேல் பிரியர்லி, ஆஸ்திரேலியாவின் இயான் சாப்பல் மற்றும் மார்க் டெய்லர், மேற்கிந்திய தீவுகளின் கிளைவ் லாய்ட் உள்ளிட்டவர்களுடன் இணைத்து பார்க்கக்கூடியவர் தோனி என்றும் சாப்பல் கூறியுள்ளார்.
அதிகமாக சாதித்து காட்டியவர்மேலும் தோனியின் சர்வதேச கேரியர் துவங்கிய ஆரம்ப இரண்டு ஆண்டுகள் இந்தியாவின் கோச்சாக இருந்த சாப்பல், தான் அவர்மீது வைத்த நம்பிக்கையை விட அவர் அதிகமாகவே தன்னை நிரூபித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் தான் சந்தித்த இந்திய கேப்டன்களிலேயே தோனி தான் சிறப்பானவர் என்றும் கூறியுள்ளார்.
சிறப்பான தன்னம்பிக்கைமிகச்சிறப்பான திறமைகளை கொண்டுள்ள தோனி, இந்த தலைமுறையின் சிறப்பான ஆல்-ரவுண்டர் என்றும் சாப்பல் புகழ்ந்துள்ளார். அவருடைய நகைச்சுவை மிகுந்த கொண்டாட்டத்திற்கு உரியது என்றும் குறிப்பிட்டுள்ளார். தோனியின் தன்னம்பிக்கை மிகசிறப்பானது என்றும் தோனி எதையும் வெளிப்படையாக தெரிவிப்பார் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் எளிதானது என்றும் கூறியுள்ளார்.