Sourav Ganguly Return To Cricket Association of Bengal President | பிசிசிஐல் இருந்து வெளியேறிய பிறகு சவுரவ் கங்குலி எடுத்த முக்கிய முடிவு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இருந்த முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, அதன் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்த நான்கு நாட்களுக்குப் பிறகு, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் (சிஏபி) தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார். அக்டோபர் 11 ஆம் தேதி ஐபிஎல் தலைவராவதற்கான பிசிசிஐ-ன் வாய்ப்பை அவர் நிராகரித்த நிலையில், தற்போது அவரின் இந்த நடவடிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடப் போவதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். வரும் அக்டோபர் 22 அன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் கங்குலி இரண்டாவது முறையாக தனது சொந்த ஊரின் சங்க தலைவராக பதவியேற்க உள்ளார்.

மேலும் படிக்க | ஜார்க்கண்ட் அணியுடன் தோனி: கிரிக்கெட் களத்தில் பார்க்க ரசிகர்கள் உற்சாகம்

கங்குலி அக்டோபர் 18 ஆம் தேதி மும்பைக்கு சென்று பிசிசிஐ புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ரோஜர் பின்னியிடம் தலைவர் பொறுப்பை ஒப்படைக்கிறார். கங்குலி பிசிசிஐ தலைவராக ஆவதற்கு முன்பு 2015-2019 வரை பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். புதிய பிசிசிஐ அரசியலமைப்பின்படி பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் மேலும் நான்கு ஆண்டுகள் பணியாற்ற அவர் தகுதியுடையவர்.  பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலுக்கு முன்னதாக, அவிஷேக் டால்மியாவுக்குப் பதிலாக அவரது மூத்த சகோதரர் சினேகாசிஷ் கங்குலி அதிபராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

“கங்குலி ஒரு நிர்வாகியாக கிரிக்கெட்டுக்கு இன்னும் நிறைய பங்களிக்க வேண்டும் என்று நம்புகிறார். கங்குலி கிரிக்கெட்டில் பணியாற்றவும், கிரிக்கெட் வீரர்களுக்கு உதவவும் விரும்புகிறார். அவர் எப்போதுமே பெங்கால் கிரிக்கெட் சங்கம் பற்றி மிகவும் ஆர்வமாக இருந்தார். பிசிசிஐ தலைவர் பதவியில் அவர் தொடர முடியவில்லை, ஏனெனில் ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை தலைவராக தொடர போர்டு ஊக்குவிக்கவில்லை. ஆனால் அவருக்கு இப்போது நிர்வாகியாக கணிசமான அனுபவம் உள்ளது,” என்று கங்குலியின் சுற்று வட்டாரம் தெரிவித்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிடலாம் என்று பரவலாக ஊகிக்கப்பட்டது. ஆனால் அந்த செய்தி இறுதியில் பொய்யாக போனது. அக்டோபர் 18 ஆம் தேதி, ஐசிசியில் அதன் பிரதிநிதியை வாரியம் முடிவு செய்யும். வரவிருக்கும் தலைவர் ரோஜர் பின்னியை விட செயலாளர் ஜெய் ஷாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐசிசி தேர்தலில் போட்டியிட இந்தியாவிலிருந்து ஒரு சாத்தியமான வேட்பாளரைக் கூட வாரியம் விவாதிக்கிறதா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

மேலும் படிக்க | ‘விராட் கோலியை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’ – டிரெண்டிங்கால் கொந்தளித்த ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!