8 தொகுதிகளில் நாம் தமிழர் 3வது இடம்.. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய சீமான்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர்.

இந்த தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை நாம் தமிழர் வேட்பாளர்கள் பின்னுக்கு தள்ளி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் திமுக 21 இடங்களிலும், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 8 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களிலும், பாஜக கூட்டணியில் பாமக ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

பாஜக வேட்பாளர்கள் யாரும் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, நீலகிரி தொகுதியில் போட்டியிட்டுள்ள மத்திய அமைச்சர் எல் முருகன், தென்சென்னையில் போட்டியிட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன், நெல்லையில் போட்டியிட்டுள்ள நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் தான் காலை 11.30 மணியளவில் தமிழகத்தில் 8 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர். அதன்படி புதுச்சேரி, தென்காசி, திருநெல்வேலி, திருச்சி, நாகை, சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் அதிமுக, பாஜக வேட்பாளர்களை முந்தி சீமானின் நாம் தமிழர் வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!