
மதுரை மாவட்டம்
திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை இரத்த தான மையம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார மையம் இணைந்து விவேகானந்த கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தில் நடத்தியது. இரத்ததான முகாம் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் பிரார்த்தனையுடன் தொடங்கப்பட்டது. தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் ராஜேந்திரன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பாண்டி, வாடிப்பட்டி வட்டார சுகாதார அதிகாரி மருத்துவர் மதன், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் முத்துராஜ், ராஜரத்தினம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வேலக்கால் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் கீதா மகேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ், மருத்துவர் அல்லாத மேற்பார்வையாளர் ராஜரத்தினம், சமூக சுகாதார செவிலியர் விஜயலட்சுமி, ICTC கவுன்சிலர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், இனியகுமார், சதீஷ், கிராம சுகாதார செவிலியர் மலர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியினை முனைவர் காமாட்சி, முனைவர் அசோக்குமார், முனைவர் ரமேஷ் குமார், ரகு, முனைவர் .ராஜ்குமார், முனைவர் தினகரன், முனைவர் சதீஷ் பாபு, முனைவர் கணபதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக முனைவர்ராஜ்குமார் நாட்டு நல பணி திட்ட அலுவலர் நன்றி உரை வழங்கினார். நிகழ்ச்சியினை முனைவர் அசோக்குமார் தொகுத்து வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.