CEDOI AWARDS -2022 தென் தமிழகத்தில் முதல் முறையாக விருது வழங்கும் விழா மதுரையில் நடைபெறவுள்ளது

விருது வழங்கும் விழா என்றாலே சென்னை,டெல்லி போன்ற பல்வேறு தலை நகரங்களில் மட்டுமே நடைபெறுவது வழக்கம் ஆனால் தற்போது மதுரையில் முதல் முறையாக மிகப்பிரம்மாண்டமாக விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விழாவில் திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.
CEDOI AWARDS 2022 (CIVIL ENTREPRENEURS DEVELOPMENT ORGANIZATION OF INDIA) சார்பாக நடைபெறும் இவ்விழா மதுரை சுற்றுச்சாலையில் வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில்ல் ஜூன் 4ம் தேதி நடைபெறும் இந்நிகழ்வில் நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால்,
சன் டிவி மற்றும் விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ், மதுரை முத்து உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், சின்னத்திரை நட்சத்திரங்கள் உட்பட பல்வேறு தொழில்துறையைச் சார்ந்த தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.