ஐபில் கிரிக்கெட் தொடரில் இருந்து அஸ்வின் விலக காரணம் இதுதானா ?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின்(34). டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வருகிறார். சென்னை, மேற்கு மாம்பழத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் வீடு உள்ளது. அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வருகின்றனர் அவர்களுக்காக உடனிருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அஸ்வினின் மனைவி பிரீத்தி கூறுகையில் எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா நோய் மிகவும் தனிமையில் இருக்கக்கூடிய ஒன்றாகும். அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்தது என இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!