காணிமடம் மந்திராலயத்திற்கு யோகிராம் சரத்குமார் ஜெயந்தி விழாவை முன்னிட்டுசாமிதோப்பில் இருந்து முத்திரி பதம் மற்றும் மகாதீபம் மேளதாளங்கள் முழங்க நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் தலைமையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த காணிமடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற யோகிராம் சுரத்குமார் மந்திராலயம் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். மேலும் இந்த மந்திராலயத்தில் உலக நன்மை வேண்டி லோக ஷேம யாகம், மழை வேண்டி வருண யாகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இத்தகைய பிரசித்தி பெற்ற இந்த மந்திராலயத்தில் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் இருந்து நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் தலைமையில் முத்திரி பதம் மற்றும் மகாதீபம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.