அகில இந்திய அளவில் நடைபெற்ற மனநலம் மற்றும் சிறப்பான வாழ்க்கை முறை குறித்த மாநாட்டில் பங்கேற்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவி முதலிடம் பெற்று சிறப்பு விருது பெற்றார்.
கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலைக்கல்லூரி சார்பில் மனநலம் மற்றும் சிறப்பான வாழ்க்கை முறை குறித்து சர்வதேச 2 நாள் கருத்தரங்கு இணைய வழியாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழகம், கேரளம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
பாரதியார் பல்கலைகழக உளவியல் தலைவர் டாக்டர்.அன்னலெட்சுமி, டாகடர்.சஞ்சு, டாக்டர்.பிரபாகரன் ஆகியோர் இம்மாநாட்டின் நடுவர்களாக பங்கேற்றனர்.
40 மாணவ மாணவிகள் தாங்கள் குழுவாக மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை மாநாட்டில் சமர்ப்பித்தனர். இதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவி நூருல் ஷப்ஃரான் தலைமையில் மாணவிகள் அக்ஷயா,தனிஷ்கா ஆகியோர் கூட்டாக மேற்கொண்ட ஆய்வின் முடிவினை இம்மாநாட்டில் நூருல் ஷப்ஃரான் சமர்ப்பித்தார். பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி பிரச்சினை மற்றும் அதனால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள் என்ற தலைப்பில் அவர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் அவரது ஆய்வு கட்டுரை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது. அவரை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.